என் மலர்

  ஆரோக்கியம்

  குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் குல்ஃபி
  X

  குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் குல்ஃபி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐஸ் வகைகளில் ஒன்றான குல்ஃபியை பலருக்கும் செய்யத் தெரியாது. குல்ஃபியில் ஒன்றான சாக்லேட் குல்ஃபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  பால் - 2 கப்
  பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
  சாக்லேட் - 1 கப் (துருவியது)
  சர்க்கரை - 1/2 கப்
  பிஸ்தா, பாதாம் - சிறிது (நறுக்கியது)

  செய்முறை :

  * முதலில் ஒரு பௌலில் பாலை ஊற்றி, அதில் பால் பவுடர் சேர்த்து கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.

  * பின்னர் ஒரு அகன்ற அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

  * அப்படி கொதிக்கும் போது அவ்வப்போது கிளறி விட வேண்டும். இல்லையெனில் அடிபிடித்து விடும். பாலானது சுண்டி சற்று கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

  * சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, அதில் பாதாம், பிஸ்தா மற்றும் சாக்லேட்டை போட்டு, சாக்லேட் நன்கு கரையும் வரை கிளறி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.

  * பின்னர் அதனை ஒரு பேனில் ஊற்றி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும்.

  * 1 மணிநேரம் ஆன பின்னர், அதனை வெளியே எடுத்து மிக்சியில் போட்டு ஒருமுறை நன்கு அடித்து, பின் அதனை குல்ஃபி மோல்ட்டில் ஊற்றி, அதன் நடுவே குச்சியை வைத்து, ப்ரீசரில் 6 மணிநேரம் வைத்து எடுத்தால், சாக்லேட் குல்ஃபி ரெடி!!!

  - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×