என் மலர்

  ஆரோக்கியம்

  குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை சப்பாத்தி
  X

  குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை சப்பாத்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு முட்டை சப்பாத்தி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்து என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  சப்பாத்தி - 2
  முட்டை - 3
  கடலை மாவு - 4 தேக்கரண்டி
  வெங்காயம் - 1
  பச்சை மிளகாய் - 1
  மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  உப்பு - தேவையான அளவு
  கொத்தமல்லி - சிறிது
  எண்ணெய் - தேவையான அளவு

  செய்முறை :

  * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.

  * ஒரு பாத்திரத்தில் வதக்கிய வெங்காயம், கடலைமாவு, மஞ்சள்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து அத்துடன் முட்டை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

  * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி, ஒரு சப்பாத்தியை எடுத்து கல்லில் போட்டு, கலந்து வைத்துள்ள முட்டை கலவையைத் சப்பாத்தியில் முழுவதும் படும்மாறு ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போடவும்.  * திருப்பி போட்டு அந்த பகுதியிலும் முட்டை கலவையை ஊற்றி வேக வைத்து எடுத்தால் முட்டை சப்பாத்தி ரெடி.

  * சுவையான முட்டை சப்பாத்தி ரெடி.

  * சப்பாத்தி மீதி இருந்தால் இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

  - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×