என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    டேஸ்டியான ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்
    X

    டேஸ்டியான ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்

    மாலையில் பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு விருப்பான ஸ்நாக்ஸ் ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஸ்வீட் கார்ன் - ஒன்றரை கப்
    ரவை - ஒரு கப்
    துருவிய சீஸ் - அரை கப்
    வெங்காயம் - ஒன்று
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு
    கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
    மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
    சாட் மசாலா - ஒரு தேக்கரண்டி
    பால் - 2 கப்
    மைதா - 1 கப்
    பிரெட் தூள் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

    செய்முறை :

    * கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ரவையை வறுத்தெடுத்து பால் ஊற்றி நன்கு கெட்டியாகும் வரை வேகவிடவும்.

    * அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கார்ன், சீஸ், கரம் மசாலா தூள், சாட் மசாலா, மிளகாய் தூள், உப்பு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சிறிது உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    * பிறகு அந்த மாவை சிறியதாக எடுத்து சப்பாத்தி போல் உருட்டி அதன் நடுவே ரெடி செய்து வைத்துள்ள மசாலா கலவையை வைத்து ரோல் போல செய்து கொள்ளவும். இப்படி அனைத்தையும் செய்து கொள்ளவும்.

    * இந்த மசாலா ரோலை பிரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுக்கவும். இதேபோல் மீதமுள்ள கலவையிலும் ரோல்லைத் தயார் செய்து கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ரோல்களை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

    * டேஸ்டியான ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×