என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    குழந்தைகளுக்கு விருப்பமான மீன் வடை
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான மீன் வடை

    மீனைக் குழம்பு, வறுவல் என விதவிதமாக சமைத்திருப்பீர்கள். ஆனால் மீனில் வடை செய்திருக்கிறீர்களா? இல்லையா… அப்ப மீன் வடை செய்வது எப்படி என்று பாருங்கள்.
    தேவையான பொருட்கள் :

    மீன் துண்டுகளாக - 500 கிராம் (முள் இல்லாத மீன்)
    முட்டை - 1
    உருளைக்கிழங்கு - 100 கிராம்
    மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
    பச்சைமிளகாய் - 3
    வெங்காயம் - 1
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 3 பல்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மீனைச் சிறிது நீர்விட்டு வேகவைத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும்.

    * உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மீன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, உப்பு, முட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    * அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் மாவை சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு இருபுறமும், சிவந்ததும் எடுக்கவும்.

    * ருசியான மீன் வடை தயார்.

    * உருளைக்கிழங்கிற்குப் பதிலாக இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு கலந்தும் மீன் வடை செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×