என் மலர்

  ஆரோக்கியம்

  கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: தட்டை
  X

  கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: தட்டை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யும் இனிப்பு, கார வகைகளை பற்றி பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள்:

  அரிசி மாவு - 2 கப்
  உளுத்தம் பருப்பு மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  மிளகாய் தூள் - தேவையான அளவு
  கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
  கறிவேப்பிலை - சிறிது
  உப்பு - தேவையான அளவு
  பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
  வெண்ணெய் - 2 டீஸ்பூன்
  எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

  செய்முறை:

  * முதலில் கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவி காய வைக்க வேண்டும்.

  * பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, மிளகாய் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் போட்டு கலந்து, சிறிது தண்ணீர் ஊற்றி, மாவை ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

  * பின்பு ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, ஒரு சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து, அதில் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.

  * பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள தட்டையைப் போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுக்க வேண்டும்.

  * இதேப் போன்று அனைத்து மாவையும் தட்டி, பொரித்து எடுக்க வேண்டும்.

  * இப்போது சுவையான கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் தட்டை ரெடி.

  - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×