search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: முறுக்கு
    X

    கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: முறுக்கு

    இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யும் இனிப்பு, கார வகைகளை பற்றி பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசிமாவு - 2 கப்
    பொட்டு கடலை மாவு - 1/2 கப்
    வரமிளகாய் - 12 (காரத்துக்கேற்ப)
    வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
    சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
    எள்ளு - 1 டேபிள்ஸ்பூன்
    உப்பு
    தண்ணீர்
    எண்ணெய்

    செய்முறை :

    * மிளகாயை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, கொஞ்சமா தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    * தண்ணீர் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து, கொஞ்சம் தண்ணீர், 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த(சூடான) எண்ணெய் விட்டு பிசைந்துகொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் முறுக்கு அச்சில் மாவை போட்டு வட்டமாக பிழிந்து சூடான எண்ணெயில் முறுக்குகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

    * சுவையான முறுக்கு தயார்.

    * எண்ணெய் மிதமான சூட்டில் காய்ந்தால் போதும். எல்லா முறுக்குகளும் சுட்டு எடுக்கும் வரை தீயின் அளவை ஒரேமாதிரி வைக்கவும். காற்றுப்புகாத டப்பாக்களில் எடுத்துவைக்கவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×