search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இனிப்பான பலாப்பழ அல்வா செய்வது எப்படி
    X

    இனிப்பான பலாப்பழ அல்வா செய்வது எப்படி

    எளிய முறையில் இனிப்பான பலாப்பழ அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பலாச்சுளை - 16
    சீனி - ஒன்றரை கப்
    நெய் - 4 மேசைக்கரண்டி
    முந்திரி, திராட்டை - தேவைக்கு
    ஏலக்காய் - 3

    செய்முறை :

    * ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

    * பலாச்சுளையை கொட்டை மற்றும் உள் தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து வைத்து கொள்ளவும்.

    * ஒரு அடிகனமான வாணலியில் நறுக்கிய பலாச்சுளையை போட்டு சீனி சேர்த்து அடுப்பில் வைத்து சீனி கரையும் வரை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும். இடை இடையே நெய் விட்டுக்கொண்டே இருக்கவும்.

    * 20 நிமிடம் கழித்து வறுத்த முந்திரி, திராட்டை, ஏலக்காய் தூள் சேர்த்து மீதி உள்ள நெய்யை சேர்க்கவும்.

    * அல்வா பக்கும் வந்து நெய் மேலே வரும் போது அடுப்பை அணைத்து சூடான பரிமாறவும்.

    * சுவையான பலாப்பழ அல்வா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×