search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிரெட் உருளைக்கிழங்கு போண்டா செய்வது எப்படி
    X

    பிரெட் உருளைக்கிழங்கு போண்டா செய்வது எப்படி

    உள்ளே காரமும், மேலே இனிப்பும் கொண்ட பிரெட் உருளைக்கிழங்கு போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் - 10 துண்டுகள்
    உருளைக்கிழங்கு - 2 பெரியது
    பெரியவெங்காயம் - 1 பெரியது
    பச்சை மிளகாய் - 2
    மிளகுப்பொடி - 1/2 மேசைக்கரண்டி
    கரம்மசாலாபொடி - 1/2 தேக்கரண்டி
    மிளகாய்த்தூள் - காரத்திற்கேற்ப
    உப்பு - தேவையான அளவு
    பூண்டு - - 5 பற்கள்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    கறிவேப்பிலை - 2 இணுக்கு
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு

    செய்முறை :

    * உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.

    * பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் சோம்பு தாளித்து, பெரிய வெங்காயம் கறிவேப்பிலை, பூண்டு போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நிறம் மாறியதும், உருளைகிழங்கைப்போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் மிளகுப்பொடி, கரம்மசாலாபொடி, மிளகாய்த்தூளை, தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது அடுப்பை அணைத்து விடவும்.

    * கைபொறுக்கும் சூடு வந்தவுடன் சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.



    * ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நீரை விட்டு அதில் பிரெட் துண்டு ஒன்றை எடுத்து நீரில் நனைத்து, இரண்டு கைகளுக்கும் நடுவில் வைத்து தண்ணீரை நன்றாக பிழிந்து விட்டு பிரட்டின் நடுவில் உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து நன்கு உருண்டையாக உருட்டவும். இதே போல் அனைத்து பிரெட் துண்டுகளையும் செய்து வைக்க வேண்டும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானவுடன் பிரெட் உருண்டை போட்டு பொரித்து எடுக்கவும்.

    * எண்ணெய் நன்கு காய்ந்து சரியான நேரத்தில் போட்டு எடுத்தால், ஒரு துளி கூட போண்டா எண்ணெயே குடிப்பதில்லை.

    * பிடித்த சட்னி அல்லது சாஸுடன் பாரிமாறலாம்.

    குறிப்பு:

    பிரெட் துண்டினை நீரில் நனைத்தவுடன் விரைவாக எடுக்கவில்லையெனில், அதிகப்படியான நீரை உறிஞ்சி உருண்டை பிடிக்கும் பொழுது உருளை கலவை வெளியே வந்துவிடும்.

    * கிழங்குடன் நமக்கு பிடித்தமான பட்டாணி, கேரட், கோஸ் போன்றவற்றையும் சேர்த்து வதக்கி செய்யலாம்.

    * இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டும் வதக்கி செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×