என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    குழந்தைகளுக்கு விருப்பமான பலாப்பழ வறுவல்
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான பலாப்பழ வறுவல்

    பலாப்பழ வறுவல் செய்வது மிகவும் சுலபமானது. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பலாச்சுளை - 10,  
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
    உப்பு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு.

    செய்முறை:

    * பலாச்சுளை சற்று காயாக இருக்கும்படி எடுத்துக் கொண்டு, கொட்டைகளை நீக்கிவிட்டு, நீளவாக்கில் மெல்லிய குச்சி போல நறுக்கவும்.

    * எண்ணெயை காய வைத்து பலாச்சுளைகளை உதிர்த்தது போல் தூவி நன்றாக பொரிக்கவும்..

    * வறுத்ததில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் நன்றாக குலுக்கவும்.

    * சுவையான பலாப்பழ வறுவல் ரெடி.

    * இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து ஒருவாரம் வரை பயன்படுத்தலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×