என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    இனிப்பான பலாப்பழம் பாயாசம் செய்வது எப்படி
    X

    இனிப்பான பலாப்பழம் பாயாசம் செய்வது எப்படி

    கேரளாவில் பலாப்பழ பாயாசம் மிகவும் பிரபலம். நாம் இதை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பலாப்பழம் - 20
    தேங்காய் பால் - 2 கப்
    வெல்லம் - 150 கிராம்
    ஏலக்காய் - 6
    முந்திரி - தேவையான அளவு
    பிஸ்தா - தேவையான அளவு
    நெய் - தேவைக்கு

    செய்முறை :


    * பலாப்பழத்தில் இருந்து கொட்டைகளை நீக்கி விட்டு தனியாக வைக்கவும்.

    * ஒரு பலாப்பழத்தை மட்டும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பலாப்பழத்தை வேக வைத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு நன்றாக கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

    * கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பிஸ்தாவை வறுத்து வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகை ஊற்றி ஒரு நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் மசித்து வைத்த பலாப்பழ விழுதை போட்டு அதன்பின் ஏலத்தூள், தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதிநிலை வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, பிஸ்தா, பொடியாக நறுக்கிய பலாப்பழத்தை போட்டு இறுதியில் ஒரு தேக்கரணடி நெய் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    * சுவையான இனிப்பான பலாப்பழம் பாயாசம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×