search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான வேர்க்கடலை லட்டு
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான வேர்க்கடலை லட்டு

    வேர்கடலையில் லட்டு செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை வேர்க்கடலை - 1 கப்,
    வெல்லம் - 1/2 கப்
    ஏலக்காய் தூள்  ஒரு சிட்டிகை

    செய்முறை :

    * வெல்லத்தை துருவிக் கொள்ளவும்.

    * வேர்க்கடலையை வெறும் கடாயில் எண்ணெய் விடாமல் பிரவுன் நிறம் வரும் வரை வறுக்கவும். நல்ல வாசனையுடன் தோல் தனியே உரிந்து வரும். அந்த நேரத்தில் அப்போது அடுப்பை அணைத்து வேர்க்கடலையை இறக்கவும்.



    * வேர்க் கடலையின் தோலை எடுத்து விட்டு கடலையை கொரகொரப்பா அரைக்கவும்.



    * இத்துடன் ஏலக்காய் தூள், வெல்லம் சேர்த்து கடலையும் வெல்லமும் ஒன்று சேரும் வரை மிக்சியில் விட்டு விட்டு 5 நொடிகளுக்கு அரைக்கவும்.

    * இதை ஒரு தட்டில் கொட்டி சிறு உருண்டைகளாக உருட்டவும்.



    * சுவையான வேர்க்கடலை லட்டு ரெடி.

    * இதற்கு நெய் தேவைப்படாது. எண்ணெய் தடவி உருட்டலாம். காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்து ஒருவாரம் வரை பயன்படுத்தலாம்.

    * விருப்பப்பட்டால் திராட்டை, முந்திரி, துருவிய பாதாம் சேர்த்து கொள்ளலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×