என் மலர்
ஆரோக்கியம்

சூப்பரான கீரை வடை செய்வது எப்படி
கீரையை பொரியல், கூட்டு மட்டும் செய்து சாப்பிடாமல் வடை செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு - 2 கப்,
பச்சை மிளகாய் - 2,
முளைக்கீரை, பசலைக் கீரை - தலா ஒரு கப்,
வெங்காயம் - 2
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:
* கீரை, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* கடலைப்பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கீரை, வெங்காயம், பெருஞ்சீரகம் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மாவில் தண்ணீர் சேர்க்கக்கூடாது.
* கடாயை அடுப்பில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
* சுவையான கீரை வடை ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story