search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உருளைக்கிழங்கு முட்டை கிரேவி செய்வது எப்படி
    X

    உருளைக்கிழங்கு முட்டை கிரேவி செய்வது எப்படி

    முட்டையுடன் உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து குழம்பு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 3
    பட்டாணி - 1/2 கப்
    முட்டை - 6
    பெரிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய்  - 5
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    கெட்டி தேங்காய்ப்பால்  - 1 கப்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய்  - தேவையான அளவு

    அரைக்க :

    சிவப்பு மிளகாய்  - 5
    சீரகம் - 1 டீஸ்பூன்
    தனியா  - 1 டீஸ்பூன்
    கசகசா - 2 டீஸ்பூன்
    முந்திரிப்பருப்பு - 10

    செய்முறை :

    * உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நறுக்கி கொள்ளவும்.

    * முட்டையை வேக வைத்து தோலுரிக்கவும்.

    * பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.

    * கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைக்க வேண்டிய பொருட்களை போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    * அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நன்றாக வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

    * இஞ்சி பூண்டு போஸ்ட் பச்சை வாசனை போனவுடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

    * அடுத்து அதில் உருளைக்கிழங்கு, பட்டாணி சிறிது நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    * நன்றாக கொதித்து பக்குவம் வந்ததும் அதில் முட்டையை இரண்டாக வெட்டி போட்டு அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    * கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

    * இதன் மேல் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    * இதை தோசை, சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.


    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×