என் மலர்

  ஆரோக்கியம்

  குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் சாக்லேட்
  X

  குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் சாக்லேட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் சாக்லேட் செய்யலாம்.
  தேவையான பொருட்கள் :

  பொடித்த டார்க் சாக்லேட் - 1 1/2 கப்,
  வெண்ணெய் - 1/2 கப்,
  சர்க்கரை - சிறிது,
  பாதாம், வால்நட், முந்திரி, பேரீச்சம்பழம், காய்ந்த பேரீச்சம், பெரிய திராட்சை, (Raisin), அத்திப்பழம், (முழு நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்கள்) - தேவைக்கு,
  பட்டர் பேப்பர், கலர் பேப்பர், சாக்லேட் பேப்பர் - தேவைக்கு.

  செய்முறை :

  * ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதன் உள்ளே ஒரு சிறிய பாத்திரத்தில் சாக்லேட் துண்டுகள், வெண்ணெய், சர்க்கரை சேர்த்து அடிப்பாத்திரத்தை அடுப்பின் மேல் வைத்து, மிதமான தீயில் கொதிக்க விடவும். உள்ளே இருக்கிற சாக்லேட் கலவையை கைவிடாமல் கலக்கவும். அது கரைந்து கெட்டியான விழுதாக வரும் போது இறக்கவும்.

  * சூடாக இருக்கும் போது இந்த நட்ஸ், உலர்ந்த பழங்கள் அனைத்தையும் அதில் போட்டு, நன்றாக கலந்து பட்டர் பேப்பரின் மேல் தனித்தனியாக வைக்கவும்.

  * ஆறியதும் தனித்தனியாக டிரேயில் வைத்து ஃபிரிட்ஜில் குளிர வைத்து, பின் குழந்தைகளுக்கு விருப்பமான அலங்கரிப்புடன் கொடுக்கவும்.

  * டார்க் சாக்லேட் பார் அல்லது வெள்ளை சாக்லேட் பாரிலும் இதை செய்யலாம்.

  - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×