என் மலர்
பெண்கள் உலகம்

குழந்தைகளுக்கு பிடித்தமான சில்லி பிரை இட்லி
குழந்தைகளுக்கு இட்லி சாப்பிட அடம் பிடிப்பார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
இட்லி - 12
தக்காளி சாஸ் - 4 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி - 2 கொத்து
சில்லி சிக்கன் மசாலா - 1 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
வெங்காயத்தாள் - சிறிதளவு
குடமிளகாய் - 1
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
செய்முறை :
* இட்லியை வேக வைத்து ஆறியதும் துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
* வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
* கொத்தமல்லி, வெங்காயத்தாள், குடமிளகாயை துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் போட்டு 20 விநாடிகள் வதக்கவும்.
* அதன் பிறகு அதில் துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள குடமிளகாயை போட்டு வதக்கவும்.
* அத்துடன் உப்பு, சில்லிப் பவுடர், தக்காளி சாஸ், சோயா சாஸ், கரம்மசாலா தூள் போட்டு நன்கு கிளறி விட்டு இரண்டு நிமிடங்கள் வேகவிடவும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி மேலே தூவி கிளறவும்.
* இப்போது பொரித்து வைத்துள்ள இட்லியை போட்டு கிளறி விடவும். மசாலா இட்லியில் சேரும்படி பிரட்டி விடவும்.

* சுமார் ஒரு நிமிடம் வேகவிட்டு, வெங்காயத்தாள் சேர்த்து கிளறவும். மசாலா இட்லியில் இறங்கியுள்ளதா என்று ருசி பார்த்து, இறக்கவும்.
* சுவையான சில்லி இட்லி ரெடி.
* இட்லியை பொரிக்காமல், வேக வைத்த இட்லியை போட்டும் செய்யலாம்.
* இட்லி மீந்து விட்டால் இப்படி செய்து சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story