என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    ஸ்பைசி வறுத்த மீன் மசாலா
    X

    ஸ்பைசி வறுத்த மீன் மசாலா

    பொதுவாக மீனை குழம்பு, வறுவல் என்று செய்வார்கள். ஆனால் மீனை வறுத்து, பின் மசாலா செய்வது சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும். இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பொரிப்பதற்கு...

    வஞ்சிரம் மீன் - 300 கிராம்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    ஓமம் தூள் - அரை ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு

    மசாலாவிற்கு...

    வெங்காயம் - 3
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    தக்காளி - 2
    மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
    கிராம்புத் தூள் - /14 டீஸ்பூன்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    செய்முறை  :

    * கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முதலில் மீனை நன்கு கழுவி சிறு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஓமம் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் செய்து அதில் கழுவி வைத்துள்ள மீனில் தடவி, 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள மீனை போட்டு பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

    * மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியம் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போன வதக்கிய பின்னர் தக்காளியை நன்றாக வதக்கவும்.

    * பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், கிராம்பு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    * மசாலா நன்கு வதங்கியதும், அதில் மசாலாவிற்கு ஏற்ற அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்கவிடவும்.

    * பிறகு பொரித்து வைத்துள்ள மீனை இந்த மசாலாவில் சேர்த்து, ஒரு முறை பிரட்டி, தீயை மிதமாக வைத்து, 5 நிமிடம் அடுப்பில் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * அருமையான வறுத்த ஸ்பைசி மீன் மசாலா ரெடி!!!

    * இதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, சாதத்துடன் சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×