என் மலர்
ஆரோக்கியம்

சூப்பரான கிரீன் சிக்கன் வறுவல் செய்வது எப்படி
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கிரீன் சிக்கன் வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எலும்பு இல்லாத சிக்கன் - அரை கிலோ
புதினா இலைகள் - இரண்டு கைப்பிடி
கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
பூண்டு - 15 பல்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4
மிளகு தூள் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
சோள மாவு - இரண்டு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை :
* சிக்கனை நன்கு கழுவி வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவேண்டும்.
* புதினா, கொத்தமல்லி தழையை நன்றாக கழுவி வைக்கவும்.
* மிக்சியில் புதினா இலைகள், கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டை போட்டு நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
* அரைத்த விழுதை சிக்கன் மேல் போட்டு அதனுடன் சோள மாவு, எலுமிச்சை சாறு, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்யை ஊற்றி காய்ந்தவுடன் சிக்கனை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு முறுகலாக பொரித்து எடுக்கவும்.
* சுவையான கிரீன் சிக்கன் வறுவல் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story