search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் உருளைக்கிழங்கு பால்ஸ்
    X

    மாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் உருளைக்கிழங்கு பால்ஸ்

    விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு மாலையில் வித்தியாசமாக ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், பன்னீர் பிரட் பால்ஸ் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 1 கப்
    பிரட் - 3 துண்டுகள்
    உருளைக்கிழங்கு - 1/2
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
    ரவை - 1/2 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * பன்னீரை துருவி கொள்ளவும்.

    * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து பன்னீருடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்பு பிரட் துண்டுகளின் முனைகளை நீக்கிவிட்டு, அதனை நீரில் ஒருமுறை நனைத்து தண்ணீரை நன்றாக பிழிந்து விட்டு, பன்னீருடன் சேர்த்து பிசையவும்.

    * அடுத்து அதில் வெங்காயம், கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ரவை, தக்காளி சாஸ் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு மென்மையாகும் வரை பிசைந்து உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    * சுவையான பன்னீர் பிரட் பால்ஸ் ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×