என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    குழந்தைகளுக்கு விருப்பமான பேரீச்சம்பழ கீர்
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான பேரீச்சம்பழ கீர்

    பேரீச்சம்பழம் மிகவும் சத்து நிறைந்தது. குழந்தைகளுக்கு விருப்பமான பேரீச்சம்பழ கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேரீச்சம் பழம் - 20
    பால் - 2 1/2 கப்,
    தேங்காய்ப் பால் - 1/4 கப்,
    பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் - 3 டேபிள்ஸ்பூன்,
    சீவிய முந்திரி, பாதாம் - 3 டேபிள்ஸ்பூன்,
    ஏலக்காய் தூள் - சிறிதளவு,
    நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை :

    * பேரீச்சம் பழங்களை அரை கப் வெதுவெதுப்பான பாலில் 20 நிமிடம் ஊற விடவும்.

    * கடாயில் நெய்யை சூடேற்றி முந்திரி, பாதாம், பேரீச்சம் பழங்களை சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.

    * ஊற வைத்திருக்கும் பேரீச்சம் பழங்களை சிறிது பாலுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    * மீதி பாலை மிதமான தீயில் 7 நிமிடம் கொதிக்க விட்டு இத்துடன் அரைத்த விழுதைச் சேர்க்கவும்.

    * இந்த கலவை அடிப்பிடிக்காமல் இருக்க நன்றாக கலந்து மிதமான தீயில் வைத்து கெட்டியாகும் வரை வைக்கவும்.

    * கெட்டியானவுடன் இத்துடன் ஏலக்காய் தூள், தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும்.

    * அடுத்து அதில் நெய்யில் வறுத்த பேரீச்சம் பழம், பாதாம், முந்திரி தூவி அலங்கரிக்கவும்.

    * குளிர்ச்சியாகவும் மிதமான சூட்டிலும் பரிமாறலாம்.

    இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×