என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    மொறு மொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ்
    X

    மொறு மொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ்

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் பன்னீர் ஃபிங்கர்ஸை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 1 பாக்கெட்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    மைதா - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
    பிரட் தூள் - 1 கப்
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை :

    * பன்னீரை விரல் அளவில் நீள துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    * பின் மற்றொரு பௌலில் சோள மாவு, மைதா, உப்பு, மிளகுத் தூள், மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பேஸ்ட் திக்கான பதத்தில் இருக்கவேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீர் துண்டுகளை மைதா கலவையில் முக்கி மசாலா நன்றாக பன்னீரில் ஒட்டியவுடன் அதை, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ் ரெடி!!!

    * மாலை வேளையில் இந்த ஸ்நாக்ஸை காபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×