என் மலர்
ஆரோக்கியம்

குழந்தைகளுக்கு பிடித்தமான சீஸ் ஸ்டிக்ஸ்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சீஸ் ஸ்டிக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா - 1 கப்,
சீஸ் துருவல் - கால் கப்,
சீஸ் க்யூப்ஸ் - 10,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - 2 சிட்டிகை.
நெய் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்,
உப்பு - சிறிதளவு,
எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை :
* மைதாவுடன் பேக்கிங் பவுடர், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, நெய், துருவிய சீஸ் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.
* பிசைந்த மாவை சிறிய பூரிகளாக இடுங்கள்.
* சீஸ் க்யூப்களை எடுத்துத் துருவி, பூரி மேல் தூவுங்கள். அதை மற்றொரு பூரியால் மூடி, பாய் சுருட்டுவது போல் சுருட்டிக் கொள்ளுங்கள்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்ற சூடானதும் உருட்டி வைத்துள்ள சீஸ் உருளைகளை போட்டு பொரித்தெடுங்கள்.
* பிள்ளைகளுக்குக் கடிப்பதற்கு ஏற்ற ஸ்நாக்ஸ் இது. குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் ஏற்ற சத்தான ஸ்டிக்ஸ்!
* சுலபமாக செய்யக்கூடிய இந்த சீஸ் ஸ்டிக்ஸில், கால்சியமும் புரதமும் நிறைந்துள்ளன. இவை எலும்பு மற்றும் பல் வளர்ச்சி, ரத்தம் உறைதல் ஆகியவற்றுக்கு உதவும். நரம்பு மண்டலத்தை உஷார் நிலையில் வைத்திருக்கவும் உதவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story