என் மலர்

  ஆரோக்கியம்

  குழந்தைகளுக்கு விருப்பமான டைமண்ட் பிஸ்கெட்
  X

  குழந்தைகளுக்கு விருப்பமான டைமண்ட் பிஸ்கெட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ் இது. அதை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  மைதா - ஒரு கப்,
  எள் - ஒரு டீஸ்பூன்,
  எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
  வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
  உப்பு - தேவையான அளவு.

  செய்முறை :

  * மைதா மாவை ஆவியில் வேகவிடவும்.

  * வேக வைத்த மாவுடன் உப்பு, வெண்ணெய், எள் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும்.

  * பிசைந்த மாவை 30 நிமிடங்கள் மூடி வைத்த பின் மாவை சப்பாத்தி வடிவில் உருட்டி, விரும்பிய வடிவங்களில்(சிறிய வடிவில்) வெட்டி வைக்கவும்.

  * சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  * மைதா எள் பிஸ்கெட் ரெடி

  குறிப்பு :

  * எள் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் சேர்க்க வேண்டாம். எள்ளுக்கு பதிலாக சீரகம், ஓமம் சேர்த்து கொள்ளலாம். இனிப்பு விரும்புவர்கள் உப்புக்கு பதிலாக சர்க்கரை சேர்த்து செய்யலாம்.

  * காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து ஒருவாரம் வரை உபயோகப்படுத்தலாம்.

  - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 

  Next Story
  ×