search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீட்டில் எளியமுறையில் செய்யக்கூடிய வாழைக்காய் சிப்ஸ்
    X

    வீட்டில் எளியமுறையில் செய்யக்கூடிய வாழைக்காய் சிப்ஸ்

    குழந்தைகளுக்கு வாழைக்காய் சிப்ஸ் மிகவும் பிடிக்கும். வீட்டில் எளியமுறையில் வாழைக்காய் சிப்ஸ் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைக்காய் - 3
    மிளகு - 4 தே.க
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரித்தெடுக்க

    செய்முறை :

    * வாழைக்காயின் மேல்தோலை நீக்கி அதனை மெலியதாக வட்ட வடிவில் (வாழைக்காய் சீவலில்) சீவி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

    * ஒரு தூய்மையான (வெள்ளைத்)துணியின் மீது இந்த துண்டுகளை பரப்பி சிறிது நேரம் உலற விடவும்.

    * மிளகை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் மிருதுவாக பொடித்துக்கொள்ளவும். இதனுடன் தேவையான உப்பு சேர்த்து தயாரக வைத்திருக்கவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் வெட்டி வைத்த வாழைக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும். (எல்லாம் ஒரே சீராக ஒரு வகை மஞ்சள்/வெள்ளை நிறத்துக்கு மாறினதும்)

    * பொரித்தெடுத்த வாழைக்காயை சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு மேலே சிறிது உப்பு மிளகு கலவையை தூவி நன்றாக குலுக்கி எடுத்து காற்று போகாத ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

    * இதே போல் எல்லா துண்டுகளையும் பொரித்து, உப்பு மிளகு கலந்து வைக்கவும்.

    * சுவையான வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

    * உருளைக்கிழங்கு, நேந்திரம் பழத்திலும் இந்த சிப்ஸை செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 
    Next Story
    ×