search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இனிப்பான பூந்தி லட்டு செய்வது எப்படி
    X

    இனிப்பான பூந்தி லட்டு செய்வது எப்படி

    எளிமையான முறையில் வீட்டில் பூந்தி லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 2 கப்,
    வனஸ்பதி - 2 டீஸ்பூன்,
    சர்க்கரை - 3 கப்,
    தண்ணீர் - ஒன்றரை கப்,
    பொடித்த ஏலக்காய், முந்திரி, திராட்சை, குங்குமப்பூ, ஃபுட் கலர் - சிறிதளவு,
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

    செய்முறை :

    * சர்க்கரையுடன் தண்ணீரை சேர்த்து பாகு காய்ச்சவும்.

    * கடலை மாவு, வனஸ்பதியை சேர்த்துப் பிசைந்து, ஃபுட் கலர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

    * பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் மாவை ஒரு பூந்தி கரண்டியில் கொட்டி, நேராக சூடான எண்ணெயின் மேல் கரண்டியை வைத்து, மற்றொரு கரண்டியால் பலமாக தட்டினால் முத்து முத்தாக விழும்.

    * இதை பொன்னிறமாகப் பொரித்து, உடனேயே சர்க்கரைப் பாகில் போட்டு... பாகிலிருந்து பூந்திகளை எடுத்து ஒரு தட்டில் கொட்டி, பொடித்த ஏலக்காய், முந்திரி, திராட்சை, குங்குமப்பூ ஆகியவற்றைக் கலந்து லட்டு பிடிக்கவும்.

    * சுவையான சத்தான பூந்தி லட்டு ரெடி.
    Next Story
    ×