search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இனிப்பான பாஸந்தி செய்வது எப்படி
    X

    இனிப்பான பாஸந்தி செய்வது எப்படி

    குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பாஸந்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     

    கொழுப்பு நிறைந்த பால் - 1 லிட்டர்
    கண்டென்ஸ்டு மில்க் - 1/2 கப்
    சர்க்கரை -  1/2 கப்
    ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
    பாதாம் - 1/4 கப்
    முந்திரி - 1/4 கப்
    பிஸ்தா - 1/4 கப்
    குங்குமப்பூ - 1 சிட்டிகை

    செய்முறை : 

    * பாதாம், பிஸ்தா, முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சி பிறகு, சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கலவையானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, தீயை குறைத்து, தொடர்ந்து கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும். 
     
    * அப்படி தீயைக் குறைத்து கொதிக்கவிடும் போது, அதில் பாலாடை உருவாக ஆரம்பிக்கும். அந்த பாலாடையை அப்படியே தொடர்ந்து பால் ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும்.
     
    * பால் நன்கு கெட்டியானதும், அதனை இறக்கி, அதில் ஏலக்காய் பொடி, நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறி, ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் குளிர வைத்து எடுத்தால் பாசுந்தி ரெடி.
    Next Story
    ×