search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சிக்கன் கீமா தோசை செய்வது எப்படி
    X

    சிக்கன் கீமா தோசை செய்வது எப்படி

    சுவையான குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் கீமா தோசை செய்வது எப்படி பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 2 கப்
    எண்ணெய் - சிறிதளவு
    சிக்கன் - 200 கிராம்
    எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
    முட்டை - 2
    வெங்காயம் - 2
    இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    ப.மிளகாய் - 3
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
    கரம்மசாலா தூள் - கால் தேக்கரண்டி
    உப்பு - சுவைக்கு

    செய்முறை :

    * வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.

    * சிக்கனை சுத்தமாக கழுவி அதனை மிக்சியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

    * நறுக்கிய வெங்காயத்துடன், ப.மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதினை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

    * அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.

    * அடுத்து அதில் அரைத்த சிக்கனை போட்டு நன்றாக கிளறி வேகவைக்கவும். நன்றாக வெந்து முட்டை பொடிமாஸ் போல் வரும்.

    * கடைசியாக எலுமிச்சை சாறு கலந்து ஆற வைக்கவும். இப்போது சிக்கன் கீமா ரெடி.

    * ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் கீமாவை போட்டு நன்றாக அடித்து கலக்கவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி தோசை சுடவும். பின்னர் அதன் மேல் கலந்து வைத்துள்ள கீமா கலவையை சிறிது ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றவும்.

    * வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கம் வேக வைத்து எடுக்கவும். ( தோசையை திருப்பி போடாமல் மூடி போட்டு வேகவைத்தும் செய்யலாம்)

    * இப்போது சுவையான சிக்கன் கீமா தோசை ரெடி.
    Next Story
    ×