என் மலர்

  ஆரோக்கியம்

  மட்டன் சமோசா
  X
  மட்டன் சமோசா

  மட்டன் சமோசா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆட்டுக்கறி என்றாலே குழம்பு, பிரியாணி என ஞாபகம் வரும். ஆனால் மட்டனில் சமோசா செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
  தேவையான பொருட்கள்

  மைதா - 350 கிராம்
  பேக்கிங் பௌடர் - 2 தேக்கரண்டி
  கொத்துகறி - 300 கிராம்
  பெரிய வெங்காயம் - 1
  கொத்தமல்லிதழை - 1 கப்
  புதினா இலை - 1 கப்
  இஞ்சி - 1 அங்குலம்
  பச்சை மிளகாய் - 4
  உப்பு - தேவையான அளவு
  நெய் - 3 தேக்கரண்டி
  தயிர் - 1 தேக்கரண்டி
  தக்காளி - பெரியது
  கரம் மசாலா - தேக்கரண்டி

  செய்முறை

  * மைதா மாவில் பேக்கிங் பவுடரை கலந்து தேவையான உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். 2 மணி நேரம் கழித்து மறுபடியும் பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

  * கொத்துக்கறியை கடாயில் போட்டு தண்ணீர் இல்லாமல் வதக்கி கொள்ளவும்.

  * வெங்காயம், கொத்தமல்லிதழை, புதினா, இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  * தக்காளியை தண்ணீரில் வேக வைத்து தோல் நீக்கி, கரம் மசாலா கொத்தமல்லிதழை, புதினா சேர்த்து கலந்து அதனுடன் கொத்து கறி, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, உப்பு, தக்காளி கலவையை சேர்த்து கலக்கவும்.

  * மாவு உருண்டையை வட்டமாக தேய்த்து கொள்ளவும். வட்டங்களை கோன் வடிவமாக செய்து மட்டன் கலவையை வைத்து மூடவும்.

  * அரைமணி நேரத்திற்கு பிறகு அதை கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.

  * சுவையான மட்டன் சமோசா ரெடி.
  Next Story
  ×