என் மலர்tooltip icon

    சமையல்

    இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
    X

    இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

    • பூண்டு வாடை கையில் இருந்தால் சிறிதளவு பற்பசையை பூசி அலம்பினால் வாடை ஓடியே போகும்.
    • காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை சமையல் பொருட்கள் இருக்கும் அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது.

    தயிர் கெட்டியாக இருக்க, நன்கு காய்ச்சி ஆறிய பாலுடன் சிறிது காய்ச்சாத பாலையும், சிறிது தயிரையும் சேர்த்து வைக்கலாம்.

    நெய் காய்ச்சுவதற்கு முன்பு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் தேய்த்து பின்பு காய்ச்சினால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாது.

    முட்டைக்கோஸை நறுக்கும் போது அதன் தண்டுகளை சாம்பாரில் போட்டு சமைத்தால் நன்றாக இருக்கும்.

    வாழைப்பழம் சீக்கிரம் கருத்து விடாமல் இருக்க ஈரத் துணியால் சுற்றி வைத்தால் பிரெஷ்ஷாக இருக்கும்.

    பூண்டு வாடை கையில் இருந்தால் சிறிதளவு பற்பசையை பூசி அலம்பினால் வாடை ஓடியே போகும்.

    முட்டைக்கோஸை துருவி நன்றாக வதக்கி மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான கோஸ் துவையல் ரெடி.

    வழக்கமான அடை மாவுடன் தக்காளி சேர்த்து அரைத்து அதனை பாத்திரத்திற்கு மாற்றும் முன்பு துருவிய கேரட் அல்லது பீட்ரூட் போட்டு ஒரு சுற்று சுற்றி மாவை கரைத்து அடை வார்க்க ருசி அமோகமாக இருக்கும்.

    காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை சமையல் பொருட்கள் இருக்கும் அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது.

    ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது உறவைத்த பச்சரிசியுடன் ஒரு மூடி தேங்காய் துருவல், ஒரு கரண்டி பழைய சாதம் போட்டு அரைத்தால் ஆப்பம் மிருதுவாக இருக்கும்.

    Next Story
    ×