search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    தித்திப்பான ஜவ்வரிசி கேசரி
    X

    தித்திப்பான ஜவ்வரிசி கேசரி

    • ரவை, சேமியாவில் கேசரி செய்து இருப்பீங்க.
    • இன்று ஜவ்வரியில் கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ஜவ்வரிசி - கால் கிலோ

    சர்க்கரை - 150 கிராம்

    குங்குமப்பூ - 1 கிராம்

    ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

    முந்திரி, திராட்சை - விருப்பத்திற்கேற்ப

    நெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும்.

    குங்குமப்பூவை சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

    * ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் தண்ணீரை வடிகட்டிவிட்டு ஜவ்வரிசியைத் தனியாக எடுத்து வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 4 டீஸ்பூன் நெய் ஊற்றி அதில் வடிகட்டிய ஜவ்வரிசியை போட்டு நன்றாக கிளறவும்.

    * ஜவ்வரிசியை மிதமான தீயில் 15 நிமிடங்கள் கிளற வேண்டும். ஜவ்வரிசி கண்ணாடி போல் வரும் வரை இவ்வாறு செய்யவும்.

    * அடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து கிளறவும்.

    * அடுத்து அதில் சிறிது நெய், ஊறவைத்த குங்குமப்பூவை சேர்த்து கிளறவும்.

    * சர்க்கரை நன்றாக கரைந்து திக்கான பதம் வரும் போது வறுத்து வைத்த திராட்சை, முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கும் போது சிறிது நெய் சேர்த்து இறக்கவும்.

    * இப்போது சுவையான, வித்தியாசமான ஜவ்வரிசி கேசரி தயார்.

    Next Story
    ×