search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சப்பாத்திக்கு சூப்பரான உடைத்து விட்ட முட்டை மசாலா
    X

    சப்பாத்திக்கு சூப்பரான உடைத்து விட்ட முட்டை மசாலா

    • தோசை, இட்லிக்கும் தொட்டு கொள்ள அருமையான இருக்கும்.
    • இந்த ரெசிபியை செய்ய 20 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 6

    வெங்காயம் - 2

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    சீரக தூள் - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை, கறிவேப்பிலை - தேவையான அளவு

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.

    அடுத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்

    மசாலா நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி கடாயை மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.

    பின்பு மறுபக்கம் திருப்பி விட்டு 2 நிமிடம் வேகவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    இப்போது சூப்பரான முட்டை மசாலா தயார்!

    Next Story
    ×