search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    வெள்ளரிக்காயில் சாலட் மட்டுமல்ல பாயாசமும் செய்யலாம்...
    X

    வெள்ளரிக்காயில் சாலட் மட்டுமல்ல பாயாசமும் செய்யலாம்...

    • கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய்.
    • இன்று வெள்ளரிக்காயில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    வெள்ளரிக்காய் - 1

    பால் - 250 மில்லி

    சர்க்கரை - தேவையான அளவு

    அரிசி மாவு - 3 தேக்கரண்டி

    பாதாம் மிக்ஸ் - 1 மேசைக்கரண்டி

    நெய் - 2 தேக்கரண்டி

    ஏலக்காய் - 2

    முந்திரி - தேவையான அளவு

    செய்முறை

    வெள்ளரிக்காயை தோல், விதையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசி மாவுடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதனுடன் பாதாம் மிக்ஸை கலந்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்பை போட்டு வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

    அதே பாத்திரத்தில் மீதமிருக்கும் நெய்யை சேர்த்து வெள்ளரிக்காயை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

    பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள்.

    நன்கு வெந்ததும் அரிசி மாவு கலவை சேர்த்து கிளறவும்.

    பின்னர் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

    கடைசியாக காய்ச்சிய பால், முந்திரி பருப்பை சேர்த்து ருசித்தால் வெள்ளரிக்காய் பாயாசம் தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×