search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய் மோர்
    X

    உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய் மோர்

    • வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் பாதுகாக்கும்.
    • இன்று வெள்ளரிக்காய் மோர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    வெள்ளரி - 2

    மிளகு - அரை டீஸ்பூன்

    புதினா - சிறிது

    உப்பு - சிறிதளவு

    ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு

    மோர் - தேவையான அளவு

    செய்முறை :

    வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    மிக்சியில் நறுக்கிய வெள்ளரிக்காய், மிளகு, உப்பு, ஐஸ்கட்டிகள், மோர், புதினா சேர்த்து நன்றாக அரைக்கவும்.

    அரைத்த ஜூஸ் வடிகட்டியில் ஊற்றி வடிகட்டி கண்ணாடி டம்ளரில் ஊற்றி பருகவும்.

    இப்போது சூப்பரான குளுகுளு வெள்ளரிக்காய் மோர் ரெடி.

    Next Story
    ×