search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    கல்லீரலில் இருக்கும் கிருமிகள், நச்சுகளை நீக்கும் சட்னி
    X

    கல்லீரலில் இருக்கும் கிருமிகள், நச்சுகளை நீக்கும் சட்னி

    • தினமும் கொத்தமல்லி சாப்பிட்டால் கல்லீரலில் வீக்கம் ஏதும் ஏற்பட்டிருந்தால் அது குணமாகும்.
    • இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும் இந்த தேங்காய் – கொத்தமல்லி சட்னி.

    தேவையான பொருட்கள் :

    கொத்தமல்லி – ஒரு கட்டு (கழுவி சுத்தம் செய்யவும்),

    பச்சை மிளகாய் – 4,

    தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்,

    பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்,

    எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,

    உப்பு – தேவையான அளவு.

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை

    எண்ணெய் - அரை டீஸ்பூன்

    செய்முறை:

    மிக்சியில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, உப்பு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்துக் அரைத்து எடுக்கவும் (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்).

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அரைத்த வைத்துள்ள சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சத்தான சுவையான சட்னி ரெடி.

    Next Story
    ×