search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சளி, இருமலுக்கு தீர்வு தரும் வாழைத்தண்டு சாறு
    X

    சளி, இருமலுக்கு தீர்வு தரும் வாழைத்தண்டு சாறு

    • வாரத்துக்கு 3 முறை வாழைத்தண்டு சாறு குடித்தால் சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்று நீங்கும்.
    • மருந்து, மாத்திரைகளோடு வாழ்வதை தவிர்க்க வாழைத்தண்டு சாறு உதவும்.

    தேவையான பொருட்கள் :

    சிறிய வாழைத்தண்டு - ஒன்று,

    பூண்டு - 2 பல்,

    ஓமவல்லி இலை, வெற்றிலை - தலா ஒன்று,

    துளசி - சிறிதளவு, மிளகு - 3.

    செய்முறை:

    வாழைத்தண்டை பட்டை, நார் நீக்கி, வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்…

    பூண்டு, ஓமவல்லி இலை, வெற்றிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்சியில் நறுக்கிய வாழைத்தண்டு, பூண்டு, ஓமவல்லி இலை, வெற்றிலை, துளசி, மிளகு சேர்த்து, நீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டிக்கொள்ளவும்.

    வாரம் ஒரு முறை இந்த சாற்றை அரை டம்ளர் அளவு பருகினால்… சளி, இருமல் தொந்தரவில் இருந்து பாதுகாக்கும்.

    Next Story
    ×