search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த சோற்றுக்கற்றாழை ஜூஸ்
    X

    சத்து நிறைந்த சோற்றுக்கற்றாழை ஜூஸ்

    சோற்றுக்கற்றாழையில் வைட்டமின் ஏ, சி, இ மற்றும் அனைத்து விதமான தாதுக்களும் இருக்கிறது. இன்று சோற்றுக்கற்றாழை ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோற்றுக்கற்றாழை ஜெல் - 2 டீஸ்பூன்
    தேன் - 1 ஸ்பூன்
    தண்ணீர் - தேவையான அளவு



    செய்முறை :

    சோற்றுக்கற்றாழை தோலை முழுவதுமாக நீக்கி அதில் உள்ள ஜெல்லை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த சோற்றுக்கற்றாழை ஜெல்லை மிக்சியில் போட்ட அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    அரைத்த ஜூஸில் தேன் கலந்து சாப்பிடவும்.

    சூப்பரான சோற்றுக்கற்றாழை ஜூஸ் ரெடி.

    ஆரோக்கிய பலன்: சோற்றுக்கற்றாழையில் வைட்டமின் ஏ, சி, இ மற்றும் அனைத்து விதமான தாதுக்களும் இருக்கிறது. சருமத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் இது நல்லது. கொழுப்பை குறைக்கும். ரத்த அழுத்தத்தை சீராக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். நரம்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். இந்த ஜூஸை தொடர்ந்து பத்து நாட்கள் பருகிவிட்டு பின்னர் 10 நாட்கள் இடைவெளி விட்டு மறுபடியும் 10 நாட்கள் தொடர்ந்து பருகலாம்.

    குறிப்பு: இதை கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் சாப்பிடக்கூடாது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×