search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான பட்டாணி கேரட் அடை
    X

    சத்தான பட்டாணி கேரட் அடை

    பட்டாணியில் புரோட்டீன் சத்தும், கேரட்டில் ‘விட்டமின் ஏ’ சத்தும் அதிகமுள்ளது. இவை இரண்டையும் வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பட்டாணி - கால் கிலோ,
    கேரட் - 100 கிராம்,
    வெங்காயம் - 1,
    பச்சை மிளகாய் - 2,
    கொத்தமல்லி - அரை கட்டு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கேரட்டை துருவிக் கொள்ளவும்.

    * பட்டாணியை ஊற வைத்துக் கழுவி மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.

    * அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் துருவிய கேரட், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கலக்கவும்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை அடைகளாக தட்டி போட்டு, சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.

    * சத்தான சுவையான பட்டாணி கேரட் அடை ரெடி.

    குறிப்பு: பட்டாணியில் புரோட்டீன் சத்து அதிகமுள்ளது, கேரட்டில் ‘விட்டமின் ஏ’ அதிகமுள்ளது. இவை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்கிறது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×