search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான முளைகட்டிய பச்சைபயறு சுண்டல்
    X

    சத்தான முளைகட்டிய பச்சைபயறு சுண்டல்

    முளைகட்டிய பச்சைபயறை காலையில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மிகவும் நல்லது. இன்று முளைகட்டிய பச்சைபயறு சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைகட்டிய பச்சைபயறு  - 1 கைப்பிடி
    தேங்காய்ப் பூ
    கேரட்
    இஞ்சி - சிறிய துண்டு
    பச்சை மிளகாய்
    கறிவேப்பிலை
    கொத்துமல்லி

    தாளிக்க :

    நல்லெண்ணெய்
    கடுகு
    உளுந்து
    காய்ந்தமிளகாய்
    பெருங்காயம்
    கறிவேப்பிலை

    செய்முறை :

    * கறிவேப்பிலை, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * இஞ்சி, கேரட்டை துருவிக் கொள்ளவும்.

    * இட்லி பாத்திரத்தை அடுப்பிலேற்றி, காய்ந்ததும் இட்லி தட்டை வைத்து, அதில் ஈரத்துணியைப் போட்டு, குழிகளில் பயறை நிரப்பி, மூடி வேக வைக்கவும் (இட்லி அவிப்பதுபோலவே வேகவைக்க வேண்டும்.). ஐந்தாறு நிமிடங்களிலேயே வெந்துவிட்டது.

    * வெந்த பயறை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, ப.மிளகாய், துருவிய இஞ்சி, தேங்காய் பூ, கேரட், சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    * அடுத்து கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து பயறு கலவையில் கொட்டு நன்றாக கலந்து பரிமாறவும்.

    * சத்தான முளைகட்டிய பச்சைபயறு சுண்டல் ரெடி.

    * விருப்பமானால் ஒன்றிரண்டு துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×