search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சத்தான ராஜ்மா சுண்டல்
    X

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சத்தான ராஜ்மா சுண்டல்

    இரும்பு சத்து நிறைந்த ராஜ்மாவை சர்க்கரை நோயாளிகள் அதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இப்போது ராஜ்மா சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிவப்பு ராஜ்மா - ஒரு கப்
    பெருங்காயத்தூள் - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

    தாளிக்க :

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    பச்சை மிளகாய் - 2

    செய்முறை :

    * ராஜ்மாவை குறைந்தது 10 மணி நேரம் ஊறவைத்துத் தேவையான அளவு உப்பு சேர்த்துக் குக்கரில் வேகவிடவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் மல்லி (தனியா), காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளித்து, அதில் வேகவைத்த ராஜ்மாவைச் சேர்த்துக் கிளறவும்.

    * அடுத்து அதில் அரைத்த பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    * சுவையான சத்தான ராஜ்மா சுண்டல் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×