என் மலர்
லைஃப்ஸ்டைல்

வெஜிடபிள் கேழ்வரகு மாவு அடை
கேழ்வரகுடன் காய்கறிகளை சேர்த்து சத்தான சுவையான அடை செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 150 கிராம்.
உளுந்து - 50 கிராம்,
கேரட், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,
முட்டைக்கோஸ் - 25 கிராம்,
இஞ்சி, பூண்டு - சிறிதளவு
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை :
* வெங்காயம், தக்காளி, முட்டைக்கோஸ், இஞ்சி, கொத்தமல்லி, பூண்டை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* உளுத்தம் பருப்பை 1 மணிநேரம் ஊற வைத்து நைசாக அரைத்து கொள்ளவும்.
* கேழ்வரகு, உளுத்தம் மாவுடன் சிறிது நீர் சேர்த்து அடை மாவுப் பதத்தில் கலந்து அதனுடன் பொடியாக நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து நன்கு கலந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கலந்து வைத்த மாவை அடைகளாக ஊற்றி இருபுறமும் வேக வைத்து பொன்முறுவலாக எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு :
ஏதாவது ஒரு காய்கறி அல்லது ஏதாவது ஒரு கீரை என கலந்தும் அடை வகைகளைச் செய்யலாம். வழக்கமான சைடு-டிஷ் சேர்த்துச் சாப்பிடலாம். தனியாகச் சாப்பிட்டாலும் அருமையான சுவை கிடைக்கும்.
கேழ்வரகு மாவிற்கு பதில் கம்பு மாவு, சோள மாவு, கோதுமை மாவு, சத்துமாவு போன்றவற்றிலும் தயாரிக்கலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story