என் மலர்

  ஆரோக்கியம்

  ஆப்பிள் பேரீச்சம்பழ கீர்
  X

  ஆப்பிள் பேரீச்சம்பழ கீர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் பேரீச்சம் பழ கீர் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பார்கள். சத்து நிறைந்த ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் தயாரிப்பது எப்படி என்பதை கீழே பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள்:

  ஆப்பிள் - முக்கால் கப் (பொடியாக தோலுடன் நறுக்கியது)
  சர்க்கரை - தேவையான அளவு
  தண்ணீர் - ஒரு கப்
  கொழுப்பு நீக்கிய பால் - ஒரு கப்
  சோளமாவு - 2 தேக்கரண்டி
  பேரீச்சம்பழம் - கால் கப் பொடியாக நறுக்கியது
  இனிப்பூட்டி : 2 தேக்கரண்டி
  வால்நட் -  சிறிதளவு

  செய்முறை:

  * ஒரு வாணலியில் ஆப்பிளை போட்டு அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும். சில நிமிடங்கள் ஆப்பிளை வேகவிடவும்.

  * மற்றொரு  பாத்திரத்தில் அரை கப் பாலை ஊற்றிக் காய்ச்சி இறக்கி ஆறவிடவும். அது ஆறியவுடன் அதில் சோளமாவை சேர்த்துக் கரைக்கவும்.

  * வழக்கமாக கீர் செய்யும்போது செய்வதைப்போல் பாலை கொதிக்க விட வேண்டியதில்லை. ஒரு கொதி வந்தவுடன் அதில் சோளமாவை சேர்த்துக்கலக்க வேண்டும். கட்டிகள் ஏற்படாமல் நன்றாகக் கிளறவேண்டும்.

  * அதில் பேரீச்சம்பழத்தைப் போட்டு நன்றாக கிளறவும். பேரீச்சம்பழத்தை நன்றாகக் கடைந்துவிட்டால் அதன் மணமும் சுவையும் பாலில் கலந்துவிடும். மிதமான சூட்டில் 10 நிமிடங்களுக்கு இடைவிடாது கிளறி இறக்கி விடவும்.

  * பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் எடுத்து ஆப்பிளை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதனுடன் வால்நட் துகள்களைத் தூவவும்

  இதனை பிரிட்ஜில் வைத்து பரிமாறினால் சுவையான பேரீச்சம்பழம் ஆப்பிள் கீர் தயார்.
  Next Story
  ×