என் மலர்
ஆரோக்கியம்

வறுத்தரைத்த மிளகு - பூண்டு குழம்பு செய்வது எப்படி
உடலுக்கு ஆரோக்கியமான இந்த வறுத்தரைத்த மிளகுக் குழம்பை வாரம் ஒருமுறை செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 1 கப்,
புளி - எலுமிச்சை அளவு,
தக்காளி - 4,
எண்ணெய் - 5 ஸ்பூன்,
கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - சிறிது.
அரைக்க :
மிளகு, சீரகம் - தலா 2 டேபிள் ஸ்பூன்,
உளுந்து, கடலை பருப்பு தலா - 2 டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
சுக்கு - 1 துண்டு,
மிளகாய் வற்றல் - 4.
செய்முறை :
* புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வையுங்கள்.
* பூண்டு, வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
* வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு வறுத்து, ஆறவைத்து கால் கப் தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* கடாளை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டு, தக்காளியை சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள்.
* நன்றாக வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசல், அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கறிவேப்பிலை தூவி இறக்குங்கள்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story