search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நவராத்திரி ஸ்பெஷல் காராமணி - கேரட் சுண்டல்
    X

    நவராத்திரி ஸ்பெஷல் காராமணி - கேரட் சுண்டல்

    நவராத்திரிக்கு நைவேத்தியம் படைக்கும் போது காராமணி - கேரட் சுண்டல் வைத்து படைக்கலாம். அசத்தலாக இருக்கும்.




    karamani sundal

    தேவையான பொருட்கள் :

    காராமணி - 250 கிராம்
    கேரட் - 2 (துருவிக் கொள்ளவும்)
    பெரிய வெங்காயம் - ஒன்று
    பச்சைமிளகாய் - 2
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எண்ணெய் - 4 டீஸ்பூன்
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன்

    செய்முறை :

    * கேரட்டை துருவிக் கொள்ளவும்.

    * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * காராமணியை எண்ணெய் விடாமல் லேசாக வறுத்து, 1 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் போட்டு வேகவைத்து கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    * இத்துடன் பாதியளவு கேரட் துருவல், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    * இத்துடன் வேக வைத்த காராமணி சேர்த்து கலந்து, 5 நிமிடம் தீயைக் குறைத்து வைக்கவும்.

    * இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கி, மீதியுள்ள கேரட் துருவல், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

    * சுவையான சத்தான காராமணி - கேரட் சுண்டல் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×