search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான சத்தான ஸ்வீட் கார்ன் சூப்
    X

    சுவையான சத்தான ஸ்வீட் கார்ன் சூப்

    வழக்கமாக நாம் ஹோட்டலில் குடிக்கும் ஸ்வீட் கார்ன் சூப்பை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோளம் - 4,
    வெங்காயம் - 1,
    வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
    பால் - 1 கப்,
    அஜினோ மோட்டோ - அரை டீஸ்பூன்,
    வெள்ளை மிளகுத்தூள் - தேவையான
    உப்பு, சர்க்கரை - தேவையான அளவு,
    சோயா சாஸ் - சில துளிகள்,
    இஞ்சி - ½ அங்குலத்துண்டு.

    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சோளத்தை உரித்து, பெரிய கண் உடைய துருவியில் லேசாகத் துருவிக்கொள்ளவும்.

    * அடுப்பில் கடாய் வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * குக்கரில் துருவிய சோளத்தை போட்டு அதனுடன் பால், தண்ணீர், வதக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து பிரஷர் குக்கரில் பத்து நிமிடங்கள் சோளம் நன்கு வேகும் வரையில் வெயிட் போட்டு வேகவிடவும்.

    * வெந்தபின் ஆறவைத்து, இஞ்சித்துண்டை எடுத்துவிடவும்.

    * வேகவைத்த முழு சோள மணிகள் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவுக்குத் தனியே எடுத்து வைக்கவும்.

    * மீதமுள்ளவற்றை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து நன்கு வடிகட்டி தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

    * உப்பு, சர்க்கரை, சோயா சாஸ், அஜினோ மோட்டோ சேர்த்து அடுப்பில் வைத்து கொதிநிலை வரும்வரை சூடாக்கவும். நடுவே கலந்துவிடவும்.

    * வேக வைத்த சோள மணிகளையும் இத்துடன் சேர்த்து இறக்கவும்.

    * பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள் தூவவும்.

    * சுவையான சத்தான ஸ்வீட் கார்ன் சூப் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×