search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான சத்தான மொச்சை சுண்டல்
    X

    சுவையான சத்தான மொச்சை சுண்டல்

    மொச்சை உடலுக்குக் குளிர்ச்சித் தன்மையைக் கொடுக்கக்கூடியது. மொச்சை சுண்டல் எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மொச்சை - ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது)
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    உப்பு - தேவைகேற்ப
    தேங்காய் துருவல் - இரண்டு டீஸ்பூன்
    எலுமிச்சை பழம் சாறு - அரை டீஸ்பூன்

    பொடி செய்ய :

    புதினா - ஒரு கைப் பிடி
    ஓமம் - ஒரு டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - இரண்டு

    தாளிக்க :

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - ஒன்று
    கறிவேப்பில்லை - சிறிதளவு

    செய்முறை :

    * கடாயில் ஓமம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்த பின், புதினா சேர்த்து லேசாக வதக்கி பொடி செய்து கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளித்த பின் வேகவைத்த மொச்சை, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் போட்டு மூன்று நிமிடம் கிளறவும்.

    * கடைசியாக வறுத்து அரைத்த பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

    * சுவையான சத்தான மொச்சை சுண்டல் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×