என் மலர்

  ஆரோக்கியம்

  உடல் சூட்டை குறைக்கும் வெள்ளரிக்காய் மோர்
  X

  உடல் சூட்டை குறைக்கும் வெள்ளரிக்காய் மோர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோர், வெள்ளரிக்காய் உடலின் சூட்டைக் குறைக்கும். இப்போது வெள்ளரிக்காய் மோர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  தயிர் - 100 மில்லி
  கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  வெள்ளரிக்காய் - சிறியது 1
  உப்பு - தேவையான அளவு
  தண்ணீர் - 200 மில்லி

  செய்முறை :

  * வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

  * கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  * வெண்ணெய் நீக்கிய தயிரில் தண்ணீர் விட்டு நன்கு அடித்து கலக்கவும்.

  * பின்னர் அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, துருவிய வெள்ளரி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

  * சுவையான வெள்ளரி மோர் ரெடி. புளிக்கும் முன்பே சுவைக்கவும்.

  குறிப்பு :

  தண்ணீர் சேர்த்த தயிரை மிக்ஸியில் (அ) பிளன்டரில் நன்றாக அடித்துக் கொள்ளவும். மோர் உடலின் சூட்டைக் குறைக்கும்.

  - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×