என் மலர்

    ஆரோக்கியம்

    சுவையான சத்தான கொத்தமல்லி சூப்
    X

    சுவையான சத்தான கொத்தமல்லி சூப்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொத்தமல்லியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கொத்தமல்லியை வைத்து எப்படி சூப் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 டேபிள்ஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - 1,
    பூண்டு - 6 பல்,
    மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்,
    தேங்காய்ப்பால் - கால் கப்,
    எலுமிச்சம்பழச்சாறு (விருப்பப்பட்டால்) - ருசிக்கேற்ப,
    உப்பு - தேவையான அளவு.
     
    அரைக்க :
     
    கொத்தமல்லித்தழை - 2 கைப்பிடி,
    புதினா - 10 இலை,
    தனியாதூள் - 2 ஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 1,
    பூண்டு- 2 பல்.  

    செய்முறை :

    * வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    * அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    * 3 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் பாசுமதி அரிசியைக் கழுவிச் சேருங்கள்.

    * அரைத்த விழுதை ஒரு சிறிய துணியில் மூட்டையாகக் கட்டி அதனையும், தண்ணீருக்குள் போடுங்கள்.

    * தேவையான உப்பு சேர்த்து, சிறிய தீயில் வைத்து அரிசி நன்கு வேகும் வரை கொதிக்க விடவும்.

    * அரிசி நன்கு வெந்ததும் இறக்கி வைத்து, தேங்காய்ப்பாலை சேர்க்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயத்தை சேர்த்து வதக்கி, சூப்பில் சேர்த்து, நன்கு கலந்து பரிமாறுங்கள்.

    (காய்கறிகள் சேர்க்க விரும்பினால், பாசுமதி அரிசியைப் பாதியாகக் குறைத்துக்கொண்டு, அத்துடன் கேரட், பீன்ஸ், கோஸ், நறுக்கிப் போட்டு வேகவிட்டு சூப் செய்யலாம்)

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×