என் மலர்
ஆரோக்கியம்

சுவையான சத்தான அரிசி உப்புமா
டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த இந்த அரிசி உப்புமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
பச்சரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 2 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
நெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய்,
கடுகு,
காய்ந்த மிளகாய்,
உளுத்தம் பருப்பு,
கடலைப் பருப்பு,
பெருங்காயம்,
கறிவேப்பிலை.
செய்முறை :
* அரிசி, துவரம் பருப்பை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.
* மிளகை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், உடைத்த மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்த பின் அதில் தண்ணீரும் உப்பும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
* தண்ணீர் கொதிக்கும்போது தீயைக் குறைத்து, அரைத்து வைத்திருக்கும் அரிசி, ரவை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி வாணலியை மூடி வைக்கவும்.
* 8 லிருந்து 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்திருந்து அவ்வப்போது கிளறிவிடவும்.
* அடுப்பை அணைத்ததும், நெய் அல்லது தேங்காய் எண்ணை சேர்த்துக் கலந்து இறக்கி பரிமாறவும்.
* சுவையான சத்தான அரிசி உப்புமா ரெடி.
* அரிசி உப்புமாவிற்குக் தொட்டு கொள்ள காரச்சட்னி அருமையான இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story