search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான சத்தான வாழைத்தண்டு சூப்
    X

    சுவையான சத்தான வாழைத்தண்டு சூப்

    சுவையான சத்தான வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைத்தண்டு - பெரிய துண்டு
    வெங்காயம் - 1,
    பிரிஞ்சி இலை - 1
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    பாசிப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    நெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * வாழைத்தண்டை பொடியாக நறுக்கி நாரை எடுத்து விடவும்.

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் நெய் விட்டு சீரகம், பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * 5 நிமிடங்கள் கழித்து நறுக்கிய வாழைத்தண்டை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

    * குக்கரில் வதக்கிய வாழைத்தண்டு, அத்துடன் பாசிப் பருப்பும் போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
    * குக்கர் விசில் போடவுடன் பிரிஞ்சி இலையை எடுத்துவிட்டு ஆறவைத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

    * அரைத்த விழுதை வடிகட்டி தண்ணீர் சேர்த்து உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

    * சூடாகப் பரிமாறவும்.

    * தேவைப்பட்டால் 1 டீஸ்பூன் கார்ன் ஃப்ளோரை கரைத்து விட்டு கொதிக்க விடவும்.

    * சுவையான சத்தான வாழைத்தண்டு சூப் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×