search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான கேரட் சட்னி
    X

    சத்தான சுவையான கேரட் சட்னி

    கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கேரட்டை வைத்து எப்படி சுவையான சட்டி செய்யலாம் என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - கால் கிலோ
    காய்ந்த மிளகாய் - 4
    புளி - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உளுத்தம் பருப்பு - 3 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - சுவைக்கு
    கடுகு, உளுந்து - தாளிக்க
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பைச் வாசம் வரும் வரை சிவக்க வறுத்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், புளி எல்லாவற்றையும் போட்டு 2 நிமிடம் வரை வதக்கி ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும்.

    * கேரட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டித் அதே வாணலியில் போட்டு 5 நிமிடங்கள் வரை வதக்குங்கள்.

    * வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறியவுடன் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டுத் தேவையான அளவு தண்ணீர் நன்றாக அரைத்து கொள்ளவும்.

    * மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் அரைத்த கேரட் சட்னியில் கொட்டி 2 நிமிடம் வதக்கி இறக்கிவிடவும்

    * இப்போது சுவையான சத்தான கேரட் சட்னி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×