என் மலர்

  ஆரோக்கியம்

  சத்தான ஆளி விதை - வேர்க்கடலை சட்னி
  X

  சத்தான ஆளி விதை - வேர்க்கடலை சட்னி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாரடைப்பு வராமல் தடுக்கும் சக்தி கொண்டது ஆளி விதை. ஆளி விதை கொண்டு சத்தான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  flax seed என்றால் ஆளி விதை அல்லது சணல் விதையென்று சொல்லலாம். ஆளி விதையில் அடங்கியுள்ள சத்துக்கள் புரதம், கால்சியம், இரும்பு, நார்ச்சத்து. ஆளி விதையை வறுத்து தான் சாப்பிட வேண்டும்.

  நாள் ஒன்றுக்கு 1 முதல் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம். இதில் உள்ள ‘ஒமேகா-3’ என்கிற முக்கிய கொழுப்புச்சத்து, ரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்புகள் படியாமலிருக்கச் செய்யும். அதனால் மாரடைப்பு வராமலிருக்க உதவும்.

  தேவையான பொருட்கள் :

  ஆளி விதை - 30  கிராம்
  கறிவேப்பிலை - 10 கிராம்
  உளுத்தம் பருப்பு - 15 கிராம்
  வேர்க்கடலை - 15 கிராம்
  காய்ந்த மிளகாய் - 3
  உப்பு  - தேவைக்கேற்றவாறு
  பெருங்காயம் - சிறிது

  தாளிக்க :

  எண்ணெய் - 1 டீஸ்பூன்
  கடுகு - 1/2 டீஸ்பூன்
  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  கறிவேப்பிலை - கொஞ்சம்
  பெருங்காயத்தூள் - சிறிதளவு

  செய்முறை :

  * வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை, ஆளி விதை, உளுத்தம் பருப்பு, மிளகாய், வேர்க்கடலை, ஆகியவற்றை தனித்தனியாக போட்டு வறுத்துக் கொள்ளவும்.

  * ஆறியபின் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து எடுக்கவும்.

  * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் அரைத்த சட்னியில் கொட்டவும்.

  * சத்தான ஆளி விதை - வேர்க்கடலை சட்னி ரெடி.

  - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×